Deals By Shop

Friday, September 27, 2013

'மதிப்பு' என்ற இந்த தளத்தின் நோக்கம்

நாம் தமிழில் பொருளாதார  நிகழ்வுகள், பங்கு வர்த்தகம் போன்றவற்றை அலசும் முதலீடு(www.revmuthal.com) என்ற தளத்தினை நடத்தி வருகிறோம்.

அதில் சில நண்பர்கள் பெருகி வரும் பணவீக்கத்தினை, அதாவது விலைவாசி உயர்வை எப்படி வீட்டளவில் சமாளிப்பது? என்று கேட்டு இருந்தார்கள்.

ஆமாம். அரசின் உலக மயமாக்கல் கொள்கை காரணமாக விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதாக உள்ளது.


ஆனாலும் நமது சக்திக்கு உட்பட்டு சில செலவுகளை குறைத்து விலைவாசி உயர்வினை சமநிலை படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

முதலில் நமது தேவை இல்லாத செலவை குறைக்கலாம். ஆனால் இந்தியர்களை பொறுத்த அளவில் தேவையற்ற செலவுகள் மிகக் குறைவு. அதனால் அதில் அதிக அளவு கை வைக்க முடியாது. இது போக நமது இதர முக்கிய குடும்ப செலவுகளையும் தவிர்க்க முடியாது.

இதற்கு எமக்கு தோன்றிய ஒரு சிறு வழி இது. இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியாளர்களை விட தரகர்கள் அதிகமாக உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. நாம் வாங்கும் பல பொருட்களுக்கு கொடுக்கும் விலையில் 50% இவர்களுக்கு தான் செல்கிறது. இவர்களை ஓரளவு தவிர்ப்பதன் மூலம் நமது செலவுகளை நிறைய குறைக்க முடியும்..

அதுக்கு தற்போதுள்ள இணைய வணிகம் பெரிதும் உதவுகிறது. அடுத்த பத்து வருடங்களில் இணைய வணிகம் பெருமளவு வளர்ச்சி அடையும் என்று நம்பபடுகிறது.

இங்கு பேரம் பேசவும் தேவை இல்லை. பிடித்தால் வாங்கலாம். நிறைய தளங்கள் போட்டி காரணமாக அதிக சலுகைகள் வழங்கி வருகின்றன. அதனை நாமும் பயன் படுத்திக்கொள்வோம்.

இதனை அனுபவப் பூர்வமாக எமது மாத பட்ஜெட்டில் 15~20% வரை குறைவு வருவதைக் காண முடிகிறது.

இந்த தளத்தில் எம்மைக் கடந்து செல்லும் சில நியாயமான, தள்ளுபடி விலையுடன் கூடிய தரமான பொருட்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறோம். நீங்களும் பயன்படுத்தி பண வீக்கத்தினை சமாளியுங்கள்.



மேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

மின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..


எமது பிற தளங்கள்
www.revmuthal.com

5 comments:

  1. வணக்கம்
    பண விரயத்தை சிக்கனப்படுத்தும் பதிவாக அமைந்துள்ளது பதிவு அருமை வாழத்த்துக்கள்
    தொடருகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    பண விரயத்தை சிக்கனப்படுத்தும் பதிவாக அமைந்துள்ளது பதிவு அருமை வாழத்த்துக்கள்
    தொடருகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    பண விரயத்தை சிக்கனப்படுத்தும் பதிவாக அமைந்துள்ளது பதிவு அருமை வாழத்த்துக்கள்
    தொடருகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இன்றைய காலகட்டத்தில்
    இதுபோன்ற தகவல்கள் அடங்கிய பதிவுகள்
    அவசியத் தேவைதான்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete